மதுரையில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ37 லட்சம் மோசடி - தம்பதி மீது புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் அரசு அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் 37 லட்ச ரூபாய் வரை மோசடி - பெண் உட்பட மூன்று பேர் மீது மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.


Advertisement

image

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவர் மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மனைவிக்கும், முரளி என்பவருக்கும் இந்து அறநிலையத் துறையில் வேலை வாங்கித்தர ஆட்கள் உள்ளனர் எனக்கூறி, அவரது நெருங்கிய உறவினரான சக்திவேல் பாண்டியராஜ் என்பவரையும், அவரது மனைவி காமேஸ்வரி மகேஸ்வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.


Advertisement

அவர்களில் சக்திவேல் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏ.ஓ.வாகவும், காமேஸ்வரி மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அதிகாரியாகவும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதனை நம்பிய காளிதாஸ், மற்றும் முரளி ஆகியோர் முதல்கட்டமாக மூன்று லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்,

image

சக்திவேல் பாண்டியராஜனும் நிறைய நபர்களுக்கு அரசுத்துறையில் வேலை வாங்கி தந்ததற்கான சான்றிதழ் ஆதாரங்கள் மற்றும் போலியான ஆர்டர் காப்பிகளை காட்டியதாகவும், காவல் ஆணையர் கோட்டாவில் அரசுப்பணிகளை சுலபமாக வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.


Advertisement

இந்த நிலையில் காளிதாஸ் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள சக்திவேல் பாண்டிராஜ் என்பவரின் அலுவலகத்தில் 3 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார், மேலும் காளிதாஸ் மற்றும் முரளியின் வீட்டின் அருகில் வசிப்பவர்களும் சக்திவேல் பாண்டியராஜிடம் தங்கமாரி, கிருஷ்ணா, நவீன், விஷ்வா உள்ளிட்ட பலரிடமிருந்து வேலைக்காக 37 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில், பல மாதங்களாக அரசு வேலைக்கான ஆணை வராததால் சந்தேகம் அடைந்து சக்திவேல் பாண்டியராஜை கேட்டபோது, கொரானா மற்றும் பல காரணங்களை கூறி இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தியபோது சரோஜா மற்றும் சக்திவேல் பாண்டியராஜன் உள்ளிட்டோர் இணைந்து மதுரை மாநகரில் பலரிடம் மின்வாரியம், இந்து அறநிலையத் துறை, கல்வித் துறை என பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலகோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது,

அதனை தொடர்ந்து காளிதாஸ் மற்றும் முரளி ஆகியோர், மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் அலுவகத்தில் சரோஜா, சக்திவேல் பாண்டியராஜ் மற்றும் அவருக்கு உதவிய தேவராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளித்தனர்.

loading...
Related Tags : மதுரைMadurai

Advertisement

Advertisement

Advertisement