[X] Close

“புதிய தலைமுறையின் பயணம் பல தலைமுறைகளுக்கு மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்” - சூர்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

10 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறைக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “புதிய தலைமுறை கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் ஒருமித்த குரலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. செய்தி வழங்கும் முறையில் புதுமைகளை அறிமுகம் செய்து, இளைய தலைமுறையினருக்கும் ‘கள நிலவரங்களை’ கொண்டு சேர்த்தது.

தானே புயல், கஜா புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம், நீட் போன்ற சமூக நீதியற்ற தேர்வுகளில் தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படுகிற அநீதி, தற்போதைய கொரோனா பாதிப்புகள் என மக்களின் பிரச்னைகளை, உணர்வுகளை உரியவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் சமரமின்றி பணியாற்றுகிறது.


Advertisement

சமூக மாற்றத்திற்காக அயராது உழைத்தவர்களுக்கு ‘தமிழன்’ விருதுகள் வழங்கி மக்களுக்கு அவர்களை அடையாளம் காட்டியதில் பலருக்கு முன்மாதிரியாக புதிய தலைமுறை திகழ்கிறது. ஏழை மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த அகரம் ஃபவுண்டேஷனின் செயல்பாடுகளில் புதிய தலைமுறை மகிழ்ச்சியுடன் பங்கேற்பதும் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்கிறது.

உறுதுணையாக இருப்பதற்காக அகரத்தின் சார்பாக நன்றிகள். 10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற புதிய தலைமுறையின் பயணம், இன்னும் பல தலைமுறைகளுக்கு மக்களின் குரலாக ஒலிக்க எனது வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement