அமெரிக்க பெண்ணின் வீட்டில் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியாரை போலீசார் கைது செய்தனர். 


Advertisement

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாடகை வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற சாமியார் நேற்று காலை அந்த அமெரிக்க நாட்டு பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் கையில் கிடைத்த ஆயுதத்தை கொண்டு சாமியாரை தாக்கியுள்ளார். அதேபோல் இந்த சாமியாரும் அந்த பெண்மணியை தாக்கியுள்ளார். பின்னர் பெண் கூச்சலிட்டத்தையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த சாமியாரை மடக்கிப்பிடித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


Advertisement

தகவலறிந்து சென்ற காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement