விஜயின் "மாஸ்டர்" படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கிறாரா லோகேஷ் கனகராஜ் ? வைரலாகும் போட்டோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


Advertisement

நடிகர் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. இதனை ‘மாநகரம்’ மற்றும் 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவருடன் விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்த இயக்குநரின் இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதினால் விஜய்யின் படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

image


Advertisement

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உலகம் முழுவதும் கொரோனா அச்சம் பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளதால் ஒட்டு மொத்த திரை உலகமும் முடங்கியது. இதனிடையே, ‘மாஸ்டர்’ படம் பற்றி மற்றும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.

image

மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் சிறைக் கைதிகள் உடையில் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இடம்பெற்றுள்ளார். உடன் ஆடை பட இயக்குநர் மாஸ்டர் படத்தின் திரைக்கதையில் பணியாற்றியுள்ள ரத்ன குமார் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கும் மகேந்திரனின் புகைப்படம் அதில் இல்லை. மகேந்திரனின் கெட் அப் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அந்தப் புகைப்படத்தை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலாகி இருந்த நிலையில், அது தொடர்பாக பல்வேறு யூகங்களும் வெளியாகி இருக்கின்றன. 


Advertisement

அதில் முக்கியமானது, மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாரா என்று பலரையும் கேள்வி கேட்க வைத்துள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் இளம் வயது சிறைக்காட்சிகள் இடம்பெறவுள்ளது. ஒருவேளை அந்த காட்சியில் அவர் நடித்திருக்கலாம் என்று பலரும் தங்களது கணிப்பை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். 

image

அதேவேளை, மாஸ்டர் படத்தின் குழுவுக்கு நெருக்கமான தரப்பில் இருந்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாஸ்டர் படம் முடிவடைந்த பிறகு சில விஷயங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, படப்பிடிப்பு தளத்தில் விஜய், விஜய்சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இடையே நடந்த நகைச்சுவையான நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, படப்பிடிப்பு தளத்திற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் கைதிகளின் உடையில் வந்து அதிர்ச்சி அளித்ததாக அது தொடர்பான புகைப்படம் தான் தற்போது வைரலாவதாகவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் படம் முடிந்த பிறகு எண்ட் டைட்டில் கார்டு போடும் போது வரும் எனவும் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement