மனைவியுடன் தகராறு - ஆந்திராவின் கிருஷ்ணா ஆற்றில் குதித்து மருத்துவர் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆந்திராவின் விஜயவாடாவில் நேற்று 42 வயது மதிப்புமிக்க ஆண் ஒருவர் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.


Advertisement

image

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் குண்டூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உதவி பேராசிரியர் ஏ.சீனிவாஸ் என தெரியவந்துள்ளது.


Advertisement

அவர் ஆற்றில் குதிப்பதற்கு முன்னர் தனது அடையாள அட்டை, தொலைபேசி மற்றும் முக கவசத்தை பாலத்தின் மீது விட்டுச் சென்றுள்ளார். அவரது உடலை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் பணிச்சுமை காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

 ‘என் மகனுக்கும், மருமகளுக்கும் இடையே சிறிய மனஸ்தாபம் இருந்தது’ என போலீசாரிடம் தெரிவித்துள்ளார் மருத்துவர் சீனிவாஸின் தந்தை.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement