மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே குன்னியூர் கிராமத்தில் கடந்த 21ஆம் தேதி புதிய மதுபான கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபான கடைக்கு அருகில் கோயில் வழிபாட்டு தலங்கள் மற்றும் பள்ளிக் கூடம் ஆகியவை உள்ளன. குறிப்பாக இந்த மதுபான கடை வழியாகத்தான் பெண்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வர வேண்டும்.
இங்கு மதுபானக்கடை இருந்தால் மது அருந்திவிட்டு தினமும் பிரச்னை ஏற்படும். ஆகவே உடனடியாக மதுபான கடையை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி குன்னியூர் கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!