பாஜகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சில தினங்களுக்கு முன் கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா, ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள், சோனியா காந்திக்கு கூட்டாக கடிதம் ஒன்று எழுதி இருந்தனர்.
கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்; களத்தில் முழுநேரம் செயல்படக்கூடிய தலைவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியை மறு சீரமைக்க வேண்டும்; கட்சியில் தலைமை முதல் கீழ்மட்டம் வரை ஒட்டு மொத்தமாக புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இளைஞர்கள் வாக்கு வங்கியை காங்கிரஸ் இழந்து வருவது குறித்து பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் நெருங்கியுள்ள நிலையில் அதனை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை ஆகியவை குறித்தும் கடிதத்தில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை முன்வைத்துள்ளார். சோனியா காந்திக்கு எதிராக கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்றும், பாஜகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் பகிரங்கமாக ராகுல்காந்தி குற்றச்சாட்டி உள்ளார். இதனால் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ