கோமா நிலையில் கிம் ஜாங்க் உன்? ஆட்சி நிர்வாகத்தை கையிலெடுக்கும் தங்கை?

Reports-says-North-Korea---s-Kim-Jong-un-in-coma-sister-Kim-Yo-jong-to-take-over

சமீபத்திய மாதங்களில் வட கொரியாவால் வெளியிடப்பட்ட கிம் ஜாங் உன்னின் அனைத்து புகைப்படங்களும் போலியானவை என்று தென்கொரியா முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் கூறியுள்ளார்.


Advertisement

36 வயதான கிம் ஜாங்க் உன்னின் உடல்நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கடந்த சில மாதங்களாக பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கிம் ஜாங்க் உன் தனது ஆட்சி அதிகாரத்தை, தனது தங்கையான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான புதிய கொள்கையை உருவாக்கி தனக்கு இருக்கும் அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


Advertisement

முன்னதாக உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்,  அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகரான சாங் சாங்-மின் கூறுகையில், ‘’ கிம் ஜாங்க் உன் தனது சகோதரிக்கு கூடுதல் பொறுப்புகளை ஒப்படைப்பது அவருக்கு உடல்நலக்குறைவு இருப்பதை வெளிக்காட்டுகிறது.

எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கிம் ஜாங் உன் கோமா நிலையில்தான் இருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை’’ என்றார்.


Advertisement

கொரியா ஹெரால்டு பத்திரிகையில், மொத்தமாக ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு தெளிவான திட்டத்தை இதுவரை வடகொரியா உருவாக்கவில்லை என்றும் ஆட்சியில் வெற்றிடம் தென்படக்கூடாது என்பதாலையே, அவரது சகோதரிக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement