தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகள் மெல்லத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதைத்தொடர்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதி தொடங்கியது.
இரண்டாவது கட்டமாக, பிளஸ் ஒன் மாணவர் சேர்க்கை இன்று (ஆகஸ்ட் 24) தொடங்குகிறது. இதற்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கு வரும் மாணவர்களும், பெற்றோர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வேலையிழப்புகளும், இடம்பெயர்தலும் அதிகரித்துள்ள நிலையில், பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ள பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
Loading More post
அரசு பஸ் டிரைக் தொடரும்: தொழிற்சங்கங்கள்
ராகுலிடம் பொய் சொல்லி ஏமாற்றியவர் நாராயணசாமி -பிரதமர் மோடி
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை