பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது புதிய தலைமுறை...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்கா இடம் பெற்ற புதி‌ய தலைமுறை தொலைக்காட்சி இன்று பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. புதிய தலைமுறை கடந்து வந்த இந்த ஒன்பது ஆண்டுகளிலும் எளிய மக்களின் பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரலாக எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒலிக்கும்.


Advertisement

பிறந்த நாள் கொண்டாடும் புதிய தலைமுறைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசு அதிகாரிகளும் பொது மக்களும் வாழ்த்து கூறியுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் சமூகத்திற்கு சுயநலமின்றி சேவையாற்றி பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

image


Advertisement

உற்சாகம் மிகுந்த இந்நாளில் ஒட்டுமொத்த புதிய தலைமுறை குழுவினருக்கும் சமூகத்திற்கு மேலும் சிறப்பாக சேவையாற்றவும் தேசத்தை உருவாக்குவதில் நல்ல பங்களிப்பையும் வழங்க வாழ்த்துவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிரவும் பலரும் புதிய தலைமுறைக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement