[X] Close

சோனு சூட்டை இனி வில்லனாக ரசிக்க முடியாது - காமெடி நடிகரின் கருத்துக்கு சோனு சூட் பதில்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சோனு சூட்டை ரசிகர்கள் இனி திரையில் வில்லனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற காமெடி நடிகரின் பதிவுக்கு ஒரு 'சர்ப்ரைஸ்' பதிலளித்துள்ளார்  சோனு சூட்.


Advertisement

கொரோனா முழு ஊரடங்கின் போது வெவ்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர் திரும்புவதற்கு பாலிவுட் நடிகர் சோனு சூட் மிகப்பெரிய அளவில் உதவி செய்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் சொந்த ஊர் திரும்பும்வரை தொடர்ச்சியாக அவர் உதவிசெய்துவந்தார்.

அதனைக் கடந்தும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கும், சமூக வலைத்தளங்கள் மூலமாக உதவி கேட்பவர்களுக்கும் அவரால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார்.


Advertisement

திரையில் ஆக்ரோஷமான வில்லனாக வலம்வரும் சோனு சூட், நிஜத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மனிதாபிமானம் கொண்டவராக இருப்பதையறிந்து பல்வேறு தரப்பினரும் அவரை கொண்டாடித் தீர்த்தனர்.

image

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் அதுல் கத்ரி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ‘’சோனு சூட் மீண்டும் ஒரு திரைப்படத்தில் வில்லன் கேரக்டரை ஒருபோதும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன். பார்வையாளர்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.


Advertisement

இதையடுத்து அதுல் கத்ரியின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, ‘Time to play New Innings bhai’  என்று சோனு பதிலளித்துள்ளார்.

சோனு சூட்டின் இந்த பதிலுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமாக, இந்த கொரோனா காலங்களில் சோனுவை ஒரு நிஜ ஹீரோவாக பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள், அதுலுடன் உடன்படவில்லை. "உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.  ஒரு நல்ல நடிகரால் மட்டுமே பல வேடங்களில் நடிக்க முடியும். மக்கள் அவரை பல்வேறு வேடங்களில் பார்க்க விரும்புகிறார்கள். வில்லன் பாத்திரத்தில் கூட மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள், நேசிப்பார்கள்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement