"ட்ரம்ப் கொடூரமானவர், பொய்யரும் கூட" -சகோதரி மேரி ஆன் ட்ரம்ப் காட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரி மேரி ஆன் ட்ரம்ப் ‘ டொனால்ட் ட்ரம்ப் கொடூரமானவர், பொய்க்காரரும் கூட’ என சொல்லியுள்ளது நேற்று வெளியான ரகசிய பதிவுகளில் மூலமாக தெரியவந்துள்ளது.


Advertisement

image

அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் அதிபர் மீதான குற்றச்சாட்டு அவரது ரத்த தொடர்பு கொண்ட சகோதரியிடமிருந்து வந்துள்ளது. 


Advertisement

image

ட்ரம்பின் குடியேற்றக் கொள்கை  விமர்சித்து பேசியுள்ள மேரி ஆன் டிரம்ப் ‘அதிபர் ட்ரம்பிற்கு கொள்கை என எதுவுமே இல்லை. அவர் கொடூரமானவர், பொய்க்காரரும் கூட’ என அந்த ரகசிய பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த பதிவு அதிபர் ட்ரம்பின் மருமகள் மூலமாக கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 


Advertisement

image

உலகின் கொடூரமான மனிதனை என் குடும்பம் எப்படி உருவாக்கியது என ட்ரம்பை குறிவைத்து மேரி ட்ரம்ப் புத்தகம் ஒன்றையும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தார். அதிபரின் வெள்ளை மாளிகை அந்த புத்தகத்தை ‘பொய்களின் புத்தகம்’ என சொல்லியிருந்தது.

‘தனக்காக கல்லூரி நுழைவுத் தேர்வை எழுத அதிபர் ஒருவருக்கு பணம் கொடுத்து தான் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்’ எனவும் அந்த ரகசிய பதிவில் சொல்லியுள்ளார் மேரி ஆன் ட்ரம்ப். அதிபர் ட்ரம்போ அல்லது வெள்ளை மாளிகையோ இந்த பதிவு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement