[X] Close >

கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியது!

Onam-festival-begins-in-Kerala

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை தொடங்கியுள்ளது.


Advertisement

நாட்டு மக்களை காண வருகின்ற மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நிகழ்வு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

மக்கள் வீடுகளையும் தெருக்களையும் அத்தப் பூக்கோலம் அமைத்து அலங்கரிப்பது ஓணம் பண்டிகையின் வெகு பிரசித்தமாகும். கேரளாவில் பத்து நாட்கள் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். அரசு சார்பில் பல்வேறு ஓண விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.


Advertisement

ஆண்டுதோறும் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி பத்தாம் நாள் திருவோண நட்சத்திர தினத்தன்று ஓணப் பண்டிகை நிறைவு பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அஸ்தம் நட்சத்திர தினமான நேற்று கேரளாவில் ஓணம் திருவிழா தொடங்கியுள்ளது. வரும் 31ம் தேதி ஓணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

image

உலகெங்கும் வாழும் மலையாளிகள் ஓணப்பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். அனால் இந்த ஆண்டு கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக பண்டிகைகளும், விழாக்களும் களையிழந்துள்ளன.


Advertisement

அந்த வகையில் ஓணப்பண்டிகைகளும் வழக்கமான உற்சாகம் இல்லை. பள்ளி, கல்லூரிகளில் ஓணப் பண்டிகை விழாக்களும், போட்டிகளும், அத்தப் பூக்கோலம் அமைத்தும் மாணவ மாணவியர், பெண்கள், குழந்தைகள் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுவர். இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் பண்டிகை கொண்டாட்டங்கள் தீவிரமடையவில்லை.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close