2021 அசாம் சட்டமன்றத் தேர்தலில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பாஜகவுக்கான முதல்வர் வேட்பாளராக இருக்கலாம் என்று அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அசாம் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகோய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதலமைச்சர் பதவிக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் ரஞ்சன் கோகோயின் பெயர் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அசாம் மாநிலத்துக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக அவர் எதிர்பார்க்கப்படுவார் என்று நான் சந்தேகிக்கிறேன். ரஞ்சன் கோகோய் மாநிலங்களவைக்குச் செல்ல முடிந்தால், பாஜகவின் அடுத்த ‘வருங்கால’ முதல்வர் வேட்பாளராகவும் ஒப்புக் கொள்ளலாம்.
“இது எல்லாமே அரசியல் பற்றியது. அயோத்தி ராமர் கோயில் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக ரஞ்சன் கோகோய் மீது பாஜக மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் படிப்படியாக மாநிலங்களவை வேட்புமனுவை ஏற்றுக்கொண்டு அரசியலில் நுழைந்தார். அவர் ஏன் மாநிலங்களவை உறுப்பினரை மறுக்கவில்லை? அவர் எளிதில் மனித உரிமை ஆணையம் அல்லது பிற உரிமை அமைப்புகளின் தலைவராக இருந்திருக்க முடியும். அவருக்கு அரசியல் லட்சியம் உள்ளது, அதனால்தான் அவர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார்'' என்று கோகோய் கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக ரஞ்சன் கோகோய் முறையாக செயல்படவில்லை என்று கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்