‘இந்தியாவுக்காக நான் மேலும் பல பெருமைகளை தேடி தருவேன்’ - ரோஹித் ஷர்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

‘ஹிட்மேன்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா. 


Advertisement

image

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச அளவில்  இந்தியாவுக்காக சிறப்பான ஆட்டத்தை விளையாடும் சிறந்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதற்காக ரோஹித் ஷர்மாவுக்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் ரோஹித் ஷர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

image

“வணக்கம் தோழர்களே. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரருக்காக கொடுக்கப்படும் விருதை நான் பெறுவது மிகப்பெரிய பாக்கியம். அதை நினைந்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். 


Advertisement

இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்தியாவுக்காக நான் மேலும் பல பல பெருமைகளை தேடி தருவேன் என உறுதியளிக்கிறேன். நாம் எல்லோரும் சமூக விலகலை கடைப்பிடித்து வருவதால், உங்கள் அனைவரையும் வெர்ச்சுவலாக ஹக் செய்து கொள்கிறேன்” என  தெரிவித்துள்ளார்  ரோஹித். 

அடுத்த சில நாட்களில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார் ரோஹித் ஷர்மா.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement