அமெரிக்காவில் சிகிச்சை... ரஜினிக்கு என்னாச்சு?

Information-about-Rajni-s-health-issues

தனது மகள் ஐஸ்வர்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. 66 வயதான ரஜினி தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். அவர் நடித்த 2.0 படத்தின் ப்ரமோசன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பை முடித்த கையோடு சிகிச்சைக்காக ரஜினி அமெரிக்கா சென்றார். இது அவரது ரசிகர்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஜினிகாந்த் நல்ல முறையில் தான் இருக்கிறார். அவரது உடல்நலத்தில் பிரச்னை ஏதும் இல்லை. அவர் அமெரிக்காவில் வழக்கமான உடற்பரிசோதனை மேற்கொள்ளவே சென்றிருக்கிறார் என அவரது நெருங்கிய வாட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபின் ஜூலையில் ஊர் திரும்பும் அவர், காலா படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறாராம். 


Advertisement

2011ம் ஆண்டு உடல்நலம் குன்றிய ரஜினி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் 6 வாரங்கள் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி சென்னை திரும்பினார். சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இடையிடையே மலேசியா சென்று உடற்பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக அவர் வழக்கமான உடற்பரிசோதனைக்காகவே அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement