”ஞானம் மலர்ந்து, புதிய பாதை பிறக்கட்டும்” விநாயக சதுர்த்திக்கு ஜோ பைடன் வாழ்த்து !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடன் விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Advertisement

image

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். மேலும் ஜனநாயக கட்சியின் சார்பில் துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்தவர்.


Advertisement

இந்நிலையில் உலகம் முழுவதும் இந்துக்கள் கொண்டாடும் விநாயக சதுர்த்திக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் "அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். எல்லா தடைகளையும் தகர்த்து, ஞானம் மலர்ந்து, புதிய தொடக்கத்துக்கான புதிய பாதை இந்நாளில் பிறக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement