"ஜோ பைடன் அதிபரானால் அமெரிக்காவை சீனா சொந்தமாக்கிவிடும்" ட்ரம்ப் விமர்சனம் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபராக தேர்தலுக்கு பின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவை சீனா சொந்தமாக்கிவிடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.


Advertisement

image

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பரப்புரை இப்போது சூடுபிடித்திருக்கிறது. இந்தத் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நேற்று கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப் "ஜோ பைடன் அதிபரானால் சீனா நம் நாட்டை சொந்தமாக்கிக்கொள்ளும். அதை நாம் நடக்கவிடக் கூடாது. உளவுத்துறையின் அறிக்கையை பார்த்தால் நமக்கே தெரியும். ஜோ பைடன் அதிபராக சீனா மிகவும் விருப்புவதாக தெரிகிறது" என்றார்.


Advertisement

image

மேலும் தொடர்ந்த அவர் "நான் வெற்றிப்பெற்றால் சீனாவுக்கு மிகவும் அவமானகரமானதாக இருக்கும். அப்படி இருக்காது எனவும் நான் நினைக்கிறேன். ஜனநாயக கட்சியின் வெறுப்பு அரசியலை நாம் புறம் தள்ள வேண்டும். அமெரிக்காவையும் அமெரிக்கர்களையும் கண்ணீர் கடலில் மிதக்க வைத்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது" என்றார் டொனால்ட் ட்ரம்ப்.

loading...

Advertisement

Advertisement

Advertisement