சென்னை: தனியார் நிறுவன ஊழியரை இரும்பு ராடால் தாக்கி பணம் பறித்த 5 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை இரும்பு ராடால் தாக்கி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

image

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் பிர்தோஷ். தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்றிரவு தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டடிற்கு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


Advertisement

அப்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிர்தோஷை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, இரும்பு ராடால் தலையில் அடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கமடைந்த பிர்தோஷின் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 1000 பணத்தை எடுத்து கொண்டு அந்த கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

image

அங்கு இருந்தவர்கள் பிர்தோஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதை அறிந்து ஆர்.கே நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.


Advertisement

விசாரணையில் தண்டையார்பேட்டை ஐ.ஒ.சி பகுதியில் ரவுடிகள் மறைந்து இருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ரவுடி ரமேஷ் (எ) புர் ரமேஷ், ஆனந்த் (எ) லொட்ட ஆனந்த், கார்த்திக், சரவணன், வெங்கடேசன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

loading...
Related Tags : சென்னைChennai

Advertisement

Advertisement

Advertisement