[X] Close >

''அறிவியல்.. அதிரடி காட்சிகள்..'' ஆர்வத்தை தூண்டும் டெனட் படத்தின் ட்ரைலர்..!

Trailer-for-Christopher-Nolan-s-Tenet-movie

டெனட் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement

அறிவியல், தொழில்நுட்பம் என திரைப்படங்களை கொடுத்து அசர வைப்பவர் கிறிஸ்டஃபர் நோலன். கடைசியாக டன்கிரிக் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக டெனட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.பல முக்கிய நடிகர்கள், அதிக பொருட்செலவு என சினிமா ரசிகர்கள் உலகம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் டெனட். ஏற்கெனவே படத்தில் போஸ்டர்களும், டீசரும் வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

image


Advertisement

டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியரியே படத்தின் கரு என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடி காட்சிகள், அறிவியல், தொழில்நுட்பம் என ட்ரைலர் முழுக்க ஆர்வத்தை தூண்டுகிறது. இந்தப்படத்திற்காக 747 ரக நிஜ விமானத்தை விலைக்கு வாங்கி வெடிக்கச்செய்துள்ளனர் என செய்திகள் வெளியானது. அதுபோல ஒரு காட்சியும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளது .

image

ஏற்கெனவே ஜூலை, ஆகஸ்ட் என படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் செப்டம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு ட்ரைலரில் தெரிவித்துள்ளது. உலக அளவில் எங்கெல்லாம் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் டெனட் வெளியாகும் எனத் தெரிகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close