“வெளிப்படையாகவும், அரசியல் சார்பற்றும் இயங்குகிறோம்” - ஃபேஸ்புக் நிர்வாகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிப்படை தன்மையுடனும், எந்தவித அரசியல் சார்பும் இன்றி ஃபேஸ்புக் செயல்படுவதாக அதன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.


Advertisement

இந்தியாவில் ஃபேஸ்புக் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக நாடாளுமன்ற தொழில்நுட்பக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்தக் குழுவில் இந்திய ஃபேஸ்புக் பிரதிநிதிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

ஃபேஸ்புக் இந்திய துணைத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் அளித்த விளக்கத்தில், “ஃபேஸ்புக் எப்போதும் திறந்த வெளியாகவும், ஒளிவு மறைவின்றியும், எந்த அரசியல் சார்பின்றியும் செயல்படுகிறது. ஃபேஸ்புக்கில் மக்கள் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக பதிவிடுகின்றனர்” என்றார்.


Advertisement

image

அத்துடன், “அரசியல் வெறுப்புணர்வு சார்ந்த கருத்துகள் பகிரப்படுவதாக நிறைய கேள்விகள் எழும்புகின்றன. ஆனால் அதற்கு ஃபேஸ்புக்கில் இடமில்லை. நாங்கள் எங்கள் தளத்தில் பதிவிடப்படும் அனைத்தையும் தரம் கண்டு உறுதிப்படுத்துகிறோம். மதம், கட்சி மற்றும் எந்தவித அரசியல் சார்பின்றி உலகம் முழுவதும் ஒரே மாதிரி செயல்படுகிறோம். வன்முறையை தூண்டும் விதமாகவும், வெறுப்புணர்வு கொண்ட பதிவுகளை கண்டறிந்து அதை நாங்கள் நீக்கிவிடுகிறோம்” என்று கூறினார்.

“என்னை இன்னும் குழந்தையாகவே பார்க்கின்றனர்” - பெற்றோர் குறித்து தவான்

loading...

Advertisement

Advertisement

Advertisement