மதுரையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 1 கோடிக்கு மேல் அபராதம் வசூல் !.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களிடம் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

image
மதுரை மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மே 13 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாயும் ஜீன் 16 ஆம் தேதி முதல் 200 ரூபாயாகவும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களை கண்காணித்து அபராதம் விதிக்க 10 பறக்கும் படை அமைக்கப்பட்ட நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பின் மூலமாக மே 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரையிலான 100 நாட்களில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

image
மாவட்டத்தில் கொரோனோ நோய்த்தொற்று குறைவதற்கு இது போன்ற நடவடிக்கை முக்கிய காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை தொடரும் என எச்சரித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement