பொள்ளாச்சியில் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்ட மின்வாரிய ஊழியர் !

Electricity-employee-caught-taking-bribe-in-Pollachi-----Action-to-be-produced-in-Coimbatore-Special-Court----

பொள்ளாச்சியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு விவசாயியிடம் ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Advertisement

image
பொள்ளாச்சி அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி அமர்நாத். இவர் அண்மையில் மடத்துக்குளம் அருகே பண்ணை கிணறு என்ற பகுதியில் 4 ஏக்கர் விவசாய நிலத்தை, ஜெயவேல் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.


அந்த நிலத்திற்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்காக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை நாடியுள்ளார். அங்கு பணியாற்றிவரும் மின்வாரிய கணக்கு மேற்பார்வையாளர், அகஸ்டின் கிறிஸ்டோபர் என்பவர், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ. 2000 லஞ்சம் கேட்டுள்ளார்.


Advertisement


இதையடுத்து விவசாயி அமர்நாத்திடமிருந்து 500ரூபாயை கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெற்றுள்ளார். மீதமுள்ள தொகையை கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விவசாயி அமர்நாத் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.

image
புகாரைத் தொடர்ந்து இன்று ரசாயனம் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அகஸ்டின் கிறிஸ்டோபர் லஞ்சமாக விவசாயிகளிடமிருந்து பெரும்பொழுது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீசார் மின்வாரிய ஊழியரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அகஸ்டின் கிறிஸ்டோபரை கோவையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement