இந்த ஆண்டின் 'தி நியூஸிலாண்டர்’ பட்டதுக்கு போட்டியிடும் 10 வயது பூனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’’இந்த ஆண்டு ‘தி நியூஸிலாண்டர் பட்டம்’ ஒர் அற்புதமான போட்டியாக இருக்கப்போகிறது. காரணம், பல பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு ஹீரோவும் போட்டியிடப்போகிறார்’’ என விருது புரவலரான மிரியாமா காமோ கூறியிருக்கிறார்.


Advertisement

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், நாட்டின் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் ப்ளூம்ஃபீல்ட் ஆகியோர் இந்த ஆண்டு நியூஸிலாண்டர் பட்டத்துக்கு போட்டியிடுகின்றனர். அவர்களுடன் மிட்டென்ஸ் என்ற பூனையுன் போட்டியில் கலந்துகொள்ள தயாராகிவருகிறது. 10 வயதான துருக்கிய அங்கோரா வகைப் பூனையான மிட்டென்ஸ், வெலிங்டனின் தெருக்களில் உலாவந்தபோது மிகவும் பிரபலமாகியது. அதனுடன் நிறையப்பேர் புகைப்படம் எடுத்து தங்களுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த பூனைக்கு ஃபேஸ்புக்கில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்கள் உள்ளனர்.

மிட்டென்ஸின் அழகிய தன்மையை அடையாளம் காண விரும்பிய அதிகாரிகள் இந்த ஆண்டில் தொடக்கத்தில், வெலிங்க்டனில் உள்ள நகரத்திற்கான சாவியை மிட்டென்ஸுக்குக் கொடுத்தனர். கடந்த சில மாதங்களாக கடினமான சூழலை சந்தித்ததால், இந்த சவாலான நேரத்தில் மிட்டென்ஸுக்கு சிறிது நிவாரணம் வழங்குவதாக மேயர் ஃபாஸ்டர் பூனையின் காலரில் சாவியை மாட்டியபோது கூறியிருந்தார்.


Advertisement

image

பூனை தொலைந்துவிட்டதாகவும், அதை மீட்கவேண்டும் எனவும் பலரும் அதிகாரிகளை எச்சரித்தனர். ஆனால் மிட்டென்ஸ் வெளியில் சுற்றுத்திரிவதை விரும்புவதாகவும், அனுபவித்து மகிழ்வதாகவும் எஸ்.பி.சி.ஏ கூறிவிட்டது. தேவாலயங்கள், அலுவலகப்பகுதிகள் மற்றும் டாட்டூ பார்லர்கள் என எங்கும் அனுமதி இல்லாதபோதிலும் மிட்டென்ஸ் சுற்றியுள்ளது. ஒரு பூனையைச் சுற்றி அனைவரும் அணிவகுத்து வருவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக அதன் உரிமையாளர் சில்வியோ புருனிஸ்மா தெரிவித்துள்ளார்.

மேலும் மிட்டென்ஸ் நகரத்தில் பலரின் இதயத்தையும் வென்றுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதும், ரசிகர்கள் முகத்தில் புன்னகையை வரவைக்க தவறவில்லை. இதுபோன்ற கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், மிகவும் கணிசமான எண்ணிக்கையிலேயே போட்டியாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும் ஒரு பூனை போட்டியிடுவது இதுவே முதன்முறை என்றும் கூறியுள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement