போலி கையொப்பம், முத்திரையை பயன்படுத்தி மோசடி : முன்னாள் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை நகர் கூட்டுறவு வங்கியின் போலியான கையொப்பம் முத்திரை தயார் செய்ததாக முன்னாள் கூட்டுறவு வங்கியின் சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Advertisement

மதுரை சரக கூட்டுறவு வங்கியின் முன்னாள் செயலராகப் பணியாற்றியவர் மாயன். இவர் மதுரை நகர் கூட்டுறவு வங்கியில் அவருடைய உறவினர் பெயரில் 9 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்வதற்காக, போலியான கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரையை பயன்படுத்தியதாக தெரிகிறது.

image


Advertisement

விசாரணையில் இதுகுறித்த உண்மை தெரியவர கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சதீஷ்குமார் காவல்நிலையத்தில் அளித்தார். அதன் அடிப்படையில் மதுரை மாநகர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வழக்கு பதிவு செய்து மாயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாயன் ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக மதுரை வணிக குற்றப்புலனாய்வு பிரிவினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement