‘தேர்வுக்கட்டணம் செலுத்தாவிட்டாலும் அண்ணா பல்கலை முடிவை வெளியிடுக’ - உயர்நீதிமன்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேர்வுக்கட்டணத்தை செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவை வெளியிடுமாறு அண்ணா பல்கலை கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஊரடங்கு காலத்திலும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்கள் அனைத்து வகையான கட்டணமும் செலுத்த உத்தரவிட்டிருப்பதோடு, நடைபெறாமல் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளிவரும் எனவும் தெரிவித்திருந்தது.


Advertisement

7 லட்சம் மாணவர்களும் தலா ₹1450 செலுத்தினால் தான் தேர்வு முடிவுகளை வெளியிடும் அண்ணா பல்கலைகழக முடிவை எதிர்த்து மாணவர்கள் ஹரிகரன் மற்றும் செளந்தர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தினாலும் செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவை வெளியிடுமாறு அண்ணா பல்கலைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசும், அண்ணா பல்கலைக்கழகமும் பதிலளிக்க உத்தரவிட்டு செப்டம்பர் 1ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement