[X] Close

"சித்த மருத்துவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது" சித்தா முதன்மை இயக்குநர் கனகவல்லி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சித்த மருத்துவத்துறையை மத்திய அரசு 'மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் கூற்று உண்மையானதா என்று  சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் கனகவல்லியிடம் கேட்டோம்,


Advertisement

  “சித்த மருத்துவம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து தலைமை மருத்துவமனைவரை சித்தா யூனிட்டுகளிலிருந்து மருத்துவர்கள் வரை போடப்பட்டுள்ளார்கள். ஆயூர்வேதத் துறை இந்தியா முழுக்க உள்ளது. அது சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது. இந்தியோடு தொடர்புடையது. அதனால், அதன் துறைகள் இந்தியா முழுக்க 30 யூனிட்டுகள் உள்ளன. ஆனால், சித்த மருத்துவத்துறை அப்படியல்ல. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது.

 


Advertisement

image

(படம்: சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமத்தின் முதன்மை இயக்குநர் டாக்டர் கனகவல்லி)

அப்படியிருக்கும்போது, மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்று சொல்ல முடியாது. சித்த மருத்துவத்திற்கு நல்ல மதிப்பு கொடுத்துதான் வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுக்க உள்ள எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஆயூர்வேதத்துறைக்கு 3000 கோடியும், தமிழகத்தில் மட்டுமே உள்ள சித்த மருத்துவத்துறைக்கு 437 கோடியும் ஒதுக்கியுள்ளார்கள். இரண்டையும் ஒப்பிட்டால் ஆயூர்வேதத்தைவிட சித்தாவுக்குத்தான் அதிக நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 3000 கோடியை 25 க்கும் மேற்பட்ட மாநிலங்களோடு பிரித்தால் 100 கோடி அளவுக்குத்தான் நிதி ஒதுக்கீடு வரும். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் 100 கோடி பெரியதா? 437 கோடி பெரியதா? என்பதை யோசித்துப் பார்க்கவேண்டும். சித்த மருத்துவம் தமிழகத்தில்தான் உள்ளது. நீதிமன்றம் இந்தியா முழுக்க உள்ளது என்று நினைத்துக்கொண்டது.


Advertisement

image

கடந்த ஐந்து வருடங்களாகத்தான் மத்திய அரசின் உதவியுடன் பாண்டிச்சேரி, கேரளாவின் திருவனந்தபுரம், ஆந்திராவின் திருப்பதி, கர்நாடகாவின் பெங்களுர், டெல்லியில் ஒரு யூனிட் என சித்த மருத்துவத்துறையின் யூனிட்டுகளை விரிவுப்படுத்தியுள்ளோம். அதோடு, சித்த மருத்துவத்தை வெளியில் கொண்டுசெல்லவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான், கடந்த  2010 ஆம் ஆண்டிலிருந்து ஆயூர்வேதத் துறையிலிருந்து சித்த மருத்துவத்துறையை தனியாக பிரித்து வந்து இத்தனை யூனிட்டுகளை மற்ற மாநிலங்களிலும் ஆயூஷ் அமைத்துள்ளது. இப்போது, கோவாவில் திறக்கவும் முடிவு செய்துள்ளார்கள். இது எல்லாமே இந்த பத்து வருடத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்தான்.

image

மேலும், கொரோனா ஆராய்ச்சிக்காக ஆயூஷ் அமைச்சகம் இந்திய மருத்துவத்தின் சித்தா, யுனானி, ஆயூர்வேதா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைக்குமே 50 லட்சம் இப்போது நிதியுதவி அளித்துள்ளார்கள். மேலும், ஆயுஷ்கென்று தனி வெப்சைட் கொடுத்து ஆயூஷில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்குமே ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தியுள்ளார்கள்” என்று நீதிமன்றத்தின் கூற்றை தெளிவுப்படுத்தி விளக்கிப் பேசுகிறார், டாக்டர் கனகவல்லி.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement