வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அமீரகத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து 2020க்கான ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடத்துவதற்கான முடிவை எடுத்தது பி.சி.சி.ஐ.
அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் பெற்ற சூழலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எட்டு அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது பி.சி.சி.ஐ.
குறிப்பாக ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கொரோனா பரிசோதனை செய்த பிறகு, அதன் முடிவுகளை பொறுத்தே வீரர்கள் இந்தியாவிலிருந்து அமீரகம் புறப்பட முடியும் என தெரிவித்திருந்தது.
அதன்படி அனைத்து அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கடந்த வாரம் சென்னைக்கு வந்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று தோனி தலைமையில் சென்னை அணியின் சேனைகளான ரெய்னா, ஜடேஜா, சாஹர் உட்பட வீரர்களும், அணி நிர்வாகிகளும் சென்னையிலிருந்து அமீரகம் புறப்பட்டுள்ளனர்.
ஹர்பஜன் சிங் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நேரடியாக அணியினரோடு இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு