கொரோனா சந்தேகங்களை தீர்க்க ஃபேஸ்புக் நேரலைக்கு ஏற்பாடு செய்த மாநகராட்சி ஆணையர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா சந்தேகங்கள் தொடர்பாக ஃபேஸ்புக் நேரலையில் அரசு மருத்துவர் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்துள்ளார், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆஷா அஜித்.


Advertisement

பொதுமக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவரிடமிருந்து விளக்கம் பெறும் வகையில் ஃபேஸ்புக் நேரலை நிகழ்வுக்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளை சனிக்கிழமை 11:45 ஃபேஸ்புக்கில் நேரலை செய்யவிருப்பதாகவும், கொரோனா சம்பந்தமாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சந்தேகங்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பிரின்ஸ் பயஸ் பதிலளிக்க உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement

image

சில தினங்களுக்கு முன்பு, சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த இன்ஜினியரிடம் கலந்துரையாடி அதனை வீடியோவாக தயார் செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாநகராட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் ஆணையர் ஆஷா அஜித் வெளியிட்டது பலரது பாராட்டை பெற்றது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement