2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வியில் இருந்து தோனி நிறைய பாடங்களை கற்றுக்கொண்டார் என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு கடந்த சுதந்திர தினத்தன்று விடை கொடுத்தார். அவர் ஓய்வை அறிவித்து 5 நாட்களாகியும், அவர் தொடர்பான கருத்துக்கள் இன்னும் ஓய்வு பெறவில்லை. தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், கிரிக்கெட் வீரர்களும் தோனி குறித்த கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தோனியின் நெருங்கிய நண்பரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் சக வீரருமான சுரேஷ் ரெய்னா தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “தோனி போட்டியை நன்றாக கவனிப்பவர். கடந்த ஆண்டுகளில் அதை நாங்கள் பார்த்திருக்கிறோம். போட்டியின்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் எங்களுடன் உரையாடுவார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்வி தோனிக்கு பெரும் பாடம். அவர் என்னிடம் ஒருமுறை பேசும்போது, வாழ்வில் பல வெற்றிகளை நாம் பார்த்திருப்போம், ஆனால் ஒரு தோல்வி நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுக்கொடுக்கும் என்றார். அதிலிருந்தே அவர் 2007ஆம் தோல்வியின் போது எப்படி அனுபவப்பட்டிருப்பார் என்று புரிந்துகொண்டேன்” என்றார்.
தோனி ஓய்வை அறிவித்த அதே நாளில் சிறிது நேரத்தில் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோனியின் ஓய்வால் வருத்தமடைந்த ரசிகர்கள், ரெய்னாவும் உடன் ஓய்வு பெற்றதால் மேலும் உருக்கமடைந்துள்ளனர்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி