உதவி செய்வதாக சிறுமியை அழைத்துச் சென்ற ஹோம்கார்டு போலீஸ்: பாலியல் சித்ரவதைக்கு ஆளான கொடுமை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பக்கத்துவீட்டு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமிக்கு உதவி செய்வதாக சொல்லி அழைத்து சென்று 20 நாட்கள் அடைத்துவைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஹோம் கார்டு காவலரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு குழந்தை திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. பபட்லாவில் கணவர் வீட்டில் வசித்த இந்த சிறுமியை பக்கத்து வீட்டு நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி தாயின் வீட்டுக்கு செல்ல பயந்து தனது தோழியின் வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார், அப்போது அசோக் சக்ரவர்த்தி என்ற ஹோம்கார்டு போலீஸ் அச்சிறுமிக்கு உதவி செய்வதாக சொல்லி அழைத்து சென்று 20 நாட்கள் ஒரு வீட்டில் வைத்து நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்


Advertisement

அச்சிறுமியை காணாமல் அவரின் தாய் பல இடங்களில் தேடி தாமதமாகவே காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன்பிறகு தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறை அந்த சிறுமியை மீட்டனர். இப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு நபர் நவீன், ஹோம்கார்டு போலீஸ் அசோக் சக்கரவர்த்தி மற்றும் அவரின் நண்பர்கள் மூன்றுபேரை கைதுசெய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement