விலங்குகளும் பறவைகளும் மிகவும் புத்திசாலித்தனம் மிக்கவை. அதை உறுதிப்படுத்தும் வகையில் மீனைப் பிடிக்க மனிதர் பயன்படுத்தும் யுக்தியைக் கையாளும் ஒரு பறவையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சை-நேச்சர் ஹப் என்ற ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அதில் ஒரு வார்த்தையில் கருத்துகளைப் பகிருமாறு பார்வையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
23 விநாடிகள் மட்டுமே வரும் இந்த வீடியோவில், ஒரு பறவை ஏரிக்கரையில் அமர்ந்திருக்கிறது. அது ஒரு சிறிய உணவுத்துகளைத் தண்ணீரில் விடுகிறது. ஒருசில பெரிய மீன்கள் உணவை சாப்பிட நெருங்கும்போது பறவை அதைத் திரும்ப எடுத்துக்கொள்கிறது.
அந்த மீன்கள் போனவுடன், மீண்டும் தூண்டிலை போடுகிறது. ஒரு சிறிய மீன் அதை சாப்பிட வரும்போது, பறவை மீனை கொத்தி வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறது.
One word this video pic.twitter.com/Ns6X2pnQic
— Sci-Nature Hub (@HubNature) August 19, 2020Advertisement
இந்த வீடியோ 115.5 ஆயிரம் பேருக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. நெட்டிசன்களும் இந்த வீடியோவிற்கு, ‘புத்திசாலித்தனம்’, ‘பொறி’, ‘கவர்ந்திழுக்கிறது’, ‘சாமர்த்தியம்’ போன்ற பல வியப்பான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!