[X] Close

யூடியூப் பார்த்து திருடிய கல்லூரி மாணவன், உடந்தையாக இருந்த தாய்: 'ஸ்கெட்ச் போட்ட போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யூடியூப் பார்த்து கொள்ளையடித்த கல்லூரி மாணவன் மற்றும் அவனது தாய் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகை மீட்கப்பட்டுள்ளது. போதைப்பழக்கத்திற்காக கொள்ளையன் ஆனதாக அம்மாணவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

image

சென்னை நங்கநல்லூர், 13வது தெருவில் வசித்து வருபவர் இளவரசன்(33), இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஊரடங்கினால் தனது வீட்டை பூட்டி விட்டு கடந்த மார்ச் 21ம் தேதி கோயம்புத்தூர் சென்றுவிட்டார். பின்னர் ஜூலை மாதம் 21ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது இரும்பு கேட் உடைக்கப்பட்டு, மரக்கதவும் உடைக்கப்பட்டு, படுக்கையறையில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து 40 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இளவரசன் பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் நிகழ்விடத்தில் ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க பழவந்தாங்கல் ஆய்வாளர்கள் சிவகுமார் மற்றும் சாமுண்டீஸ்வரி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதில் உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், பன்னீர் செல்வம் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.


Advertisement

இதில் ஒரு ஆட்டோ கொள்ளை போன நேரத்தில் அப்பகுதியில் செல்வது மட்டும் பதிவாகியிருந்தது மேலும் பக்கத்து தெருவில் ஒருவர் நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவின் பதிவெண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை இறக்கிவிட்ட இடத்தை கூறினார். அதனடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கல்லூரி மாணவன் விஜய் என்பது தெரியவந்தது. இவனை பிடிக்க தனிப்படை போலீசார் பழவந்தாங்கல், நங்கநல்லூரிலிருந்து பல்லாவரம் வரை சுமார் 20 நாட்கள் 150 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

கொள்ளையனை அடையாளம் கண்ட தனிப்படை போலீசார் கைது செய்ய அவனது வீட்டை ஜூலை 31ம் தேதி இரவு பல்லாவரத்தில் சுற்றி வளைத்த போது அவன் காவலாளியிடம் ஏற்பட்ட தகராறில் போலீசில் சிக்காமல் இருக்கவும், குடியிருப்பு வாசிகளை பயமுறுத்தவும் பெட்ரோல் வெடிகுண்டு வீசினான் அவனை அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பிடிக்க முயன்ற போது தப்பிப்பதற்காக மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் இரண்டு கால்களும் முறிந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக பல்லாவரம் போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் ஆனால் கைது செய்யவில்லை.

image


Advertisement

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவன் விஜய்(23) என்பவரை பழவந்தாங்கல் தனிப்படை போலீசார் கைது செய்தனர். நகைகளை கொள்ளையடித்து தனது தாயிடம் கொடுத்து வந்ததால் அவனது தாய் தனலட்சுமி (44) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 18 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் விஜய் குடிக்கு அடிமையாகி போதை பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு பணத்திற்காக யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க கற்றுக் கொண்டு நடந்து சென்று ஓலா மூலம் ஆட்டோ பிடித்து போய் பூட்டிய வீட்டை நோட்டமிட்டு ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையடித்து வந்ததாகவும், கொள்ளையடித்து

அதில் கஞ்சா, மதுபானங்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தியாகவும் வாக்குமூலம் அளித்தான். வேளச்சேரி காவல் நிலையத்தில் லேப்டாப் திருடிய வழக்கு ஒன்றும் அவன் மீது நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட தாய் மற்றும் கல்லூரி மாணவன் இருவர் மீதும் கொள்ளை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement