தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும் - பொன்.ராதாகிருஷ்ணன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும் என மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Advertisement

கோவில்பட்டியில், செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் என்று கூறும் தமிழக அரசு மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும். அதன் தொடக்கமாகதான் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தலைநகரமான மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி பெறாமல் உள்ளது.

மதுரை: ஆர்டிஓ., கூட்டத்தில் ...
எனவே மதுரையை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி திருவிழா தேசிய ஒருமைப்பாட்டு பண்டிகை. அதற்கான அனுமதியை தமிழக அரசு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இனி பாஜக அங்கம் வகிக்கும் ஆட்சிதான் நடைபெறும். அது எந்த கட்சியுடனும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement