‘எனது 'மாருதி 800 'காரை மீண்டும் பெற விரும்புகிறேன்’ - ரசிகர்கள் உதவியை நாடிய சச்சின்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தனது முதல் காரான ‘மாருதி 800’, மீண்டும் தன்னிடம் வந்து சேர ரசிகர்களின் உதவியை நாடியுள்ளார் சச்சின்.


Advertisement

கார்கள் மீதான மோகம்  கொண்டவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் போட்டியின் மூலம் பரிசாகவும், விலை கொடுத்தும் ஏராளமான கார்களை பெற்றுள்ளார் அவர். ஆனால், முதன்முதலாக தான் வைத்திருந்த ‘மாருதி 800’ கார் மீதுதான் சச்சினுக்கு அதிக பிரியமாம். தற்போது அந்த கார் அவரிடம் இல்லாத நிலையில், காரைப் பற்றி தகவல் தெரிந்தால் தனக்கு தெரியப்படுத்த சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.

image


Advertisement

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் ‘‘என்னுடைய முதல் கார் மாருதி 800. துரதிர்ஷ்டவசமாக தற்போது அது என்னிடம் இல்லை. மீண்டும் அந்த கார் என்னுடையதாக இருக்க நான் விரும்புகிறேன். எனவே, அந்த கார் குறித்த தகவல்கள் தெரிந்த நபர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement