சென்னையில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து திருடிக் கொண்டிருந்த நபர்களை வெளிப்புறமாக வைத்து பூட்டி போலீசில் பிடித்துக் கொடுத்த நபரை, போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டினர்.
சென்னை அரும்பாக்கம், சக்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதையடுத்து மேல்தளத்தில் வசித்து வரும் சுதன்ராஜ் என்பவர் சத்தம் போடாமல் கீழே வந்து பார்த்துள்ளார்.
அப்போது திருடர்கள் 2 பேர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதை கண்டுள்ளார். அதனையடுத்து சாதுர்யமாக செயல்பட்டு, திருடர்கள் இருவரும் வீட்டின் உள்ளே சென்றவுடன் அந்த வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அரும்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரவின் டேனி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் வீட்டிற்குள் இருந்த கொள்ளையர்கள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் செங்கல்பட்டு வெள்ளம் பகுதியைச் சேர்ந்த முரளி, கவுதம் என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வெளிப்புறமாக கதவை பூட்டி பிடிக்க உதவிய சுதன்ராஜை போலீஸ் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?