வெளியே சென்று வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி : திருமணத்தை மீறிய உறவால் நடந்த கொலை.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திண்டிவனத்தில் மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞரை கணவர் வெட்டிக்கொலை செய்தார்.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் பகுதியைச் சேர்ந்த ரகுவரன் (30 ), அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (27) இருவரும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கிரி (9) என்ற மகனும், தமிழ்ச்செல்வி (8)என்ற மகளும் உள்ளனர். மகாலட்சுமி சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் துணிக்கடையில் பணிபுரிந்து வந்தார். அப்போது சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது.

image


Advertisement

பொதுமுடக்கத்தால் சென்னையில் பெரிய அளவிலான கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மகாலட்சுமி திண்டிவனத்தில் நான்கு மாதங்களாக தங்கியிருந்தார் . இருப்பினும் இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில்  விக்னேஷுக்கு மகாலட்சுமி போன் செய்து திண்டிவனத்திற்கு வர வைத்துள்ளார். இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். வெளியே சென்று வீடு திரும்பிய ரகுவரன் இருவரையும் ஒன்றாக பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் மனைவி மகாலட்சுமியை தாக்கியுள்ளார்.

image

அப்போது விக்னேஷ் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரகுவரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விக்னேஷ் முதுகில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓட, அவரை விரட்டிச்சென்று இடுப்பில் மீண்டும் ரகுவரன் குத்தியுள்ளார். இதனால் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் விக்னேஷ் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரகுவரனை கைது செய்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக மகாலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

“மனதை உடைக்கும் செய்தி; தோனிக்கு பெரிய ஃபேர்வெல் நடத்த வேண்டும்” - கே.எல்.ராகுல்

loading...

Advertisement

Advertisement

Advertisement