கண்ணாடி கழிவறை தான்.. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்..! - ஜப்பானில் புதுமை!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உருவாக்கப்பட்டுள்ள  ’ஸ்மார்ட் கிளாஸ்’ டெக்னாலஜியால் உருவாக்கப்பட்ட ஹைஜீன் கழிவறைகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளன


Advertisement

image

“ஸ்மார்ட் கிளாஸை” பயன்படுத்தி, பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞர் ஷிகெரு பான் கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகையான கழப்பறைகள் பாதுகாப்பானதாகவும் சுகாதாரமானதாகவும் வண்ணமயமாகவும் உருவாக்கியுள்ளார். இப்போது இரண்டு பொது பூங்காக்களில் இந்த வகையான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.


Advertisement

இந்த வகை புதிய பொது கழிப்பறைகள் பிரகாசமாக ஒளிரும் வண்ணம் பாதுகாப்பு அம்சங்களோடு வெளிப்படை தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கழிவறையின் சிறப்பு என்னவென்றால், உள்ளே யாரும் இல்லை என்றால் கண்ணாடிகளில் மறைவு ஏதும் இன்றி உள்ளே உள்ளது எல்லாம் தெளிவாக தெரியும். ஒரு ஆள் உள்ளே சென்று கதவை மூடினால் அந்த கண்ணாடிகளும் மறைவை உண்டாக்கிக் கொள்ளும். வெளியில் இருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. இந்த புதுவகை கண்ணாடி கழிவறை மூலம் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும் என வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

image
ஜப்பான் நாடு நீண்ட காலமாக புதிய வகையான கழிப்பறைகளை சோதனை செய்து வருகிறது. இதன் விளைவாக பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிடக் கலைஞரான ஷிகெரு பான் வடிவமைத்துள்ள இந்த புதிய வகை கழிப்பறைகள் ஒளிபுகா மாற்றத்தை மாற்றும் “ஸ்மார்ட் கிளாஸிலிருந்து” உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வகையான வெளிப்படை தன்மையுடைய புதிய கழிப்பறைகள் ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement