கொரோனா வைரஸை விரட்ட உடம்பில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க பயனுள்ள தடுப்பூசி தேவை என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 1 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர். 2 கோடியே 22 லட்சத்து 94 ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 7 லட்சத்து 83 ஆயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 64 லட்சத்து 73 ஆயிரத்து 503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 935 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பிரிவின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “நாம் மந்தை எதிர்ப்பு சக்தியை (பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தி பெறுவது) அடைவதற்கான நம்பிக்கையுடன் வாழக்கூடாது" என்றார்.
மேலும் " உலகளவிய மக்கள் தொகையில், இந்த கொரோனா தொற்று நோயை தடுக்க தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை பெறும் அளவுக்கு நாம் நெருங்கக்கூட இல்லை. இது தீர்வு ஆகாது. நாங்கள் இதை தீர்வாக பார்க்கவும் இல்லை. பெரும்பாலானோர் எதிர்ப்புச்சக்தியை பெறுவதற்கு பயனுள்ள தடுப்பூசி தேவை, அது 50 சதவீத மக்களையாவது சென்று அடைவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்