நேற்று மட்டும் சென்னைக்கு வர இபாஸ் பெற்றவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நேற்றைக்கு மட்டும் 14,300 இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் கட்டாயம் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் உண்மையான காரணங்களை கூறினாலும் இபாஸ் மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இபாஸ் பெறும் முறையில் முறைகேடுகள் நிகழ்வதாகவும் புகார் எழுந்தது.

இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளும், வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் முறை தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி நேற்று முன் தினம் முதல் விண்ணப்பித்த உடனே இ பாஸ் கிடைக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.


Advertisement

ஈஸியான இ-பாஸ்... விண்ணப்பிக்கும் ...

இதையடுத்து நேற்று முன் தினம் மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மட்டும் 14,300 இ பாஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11, 500 பேர் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர விண்ணப்பித்திருந்ததாக மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது. இபாஸ் பெறுவதில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பணி நிமித்தமாக பலர் சென்னை திரும்பி கொண்டிருக்கின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement