யானையின் மேல் சவாரி செய்யும் குட்டிப் பறவைகள் - அழகிய வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நம்முடைய தினசரி வாழ்வை இனிதாக்குவதில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. அப்படி நம்மை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது சில வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகும்.


Advertisement

அந்த வகையில் இன்று இந்திய நிர்வாக சேவை அதிகாரி (ஐ.ஏ.எஸ்) சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறிய பறவைகள் ஒரு யானைமீது ஏறி சவாரி செய்யும் வீடியோ அது.

சாஹு வெளியிட்ட அந்த வீடியோவில், பசுமையான சாலையோரத்தில், கம்பீரமான யானை ஒன்று அழகிய காலநிலையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. அந்த யானைமீது சில சிறிய சிலி பறவைகள் உட்கார்ந்து சவாரி செய்துகொண்டிருக்கின்றன.


Advertisement

சாலையோரத்தில் ஒரு கம்பீரமான யானைமீது சிலி பறவைகள் ஜாலியாக சவாரி செய்யும் காட்சி இணையத்தில் பலரின் கண்களைக் கவர்ந்துள்ளது. ’மிகவும் அழகான காட்சி’, ‘சிறியதாக இருப்பதுகூட சிலநேரங்களில் பயனுள்ளதுதான்’ என்பது போன்ற பல கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். பதிவிட்ட ஒரு மணிநேரத்திற்குள் 1.8 ஆயிரம் பார்வைகளை அந்த வீடியோ பெற்றது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement