”சுஷாந்தின் சகோதரி என்னை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்தார்”– நடிகை ரியா அதிர்ச்சி புகார்!!

-Groped-By-Sushant-Rajput-s-Sister---Rhea-Chakraborty-s-Sensational-Claim

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் சகோதரி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்று நடிகை ரியா பரபரப்பு குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.


Advertisement

image

மறைந்த நடிகர் சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் நடிகை ரியாவும் அவரது குடும்பமும்தான் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். இதனையொட்டி நடிகை ரியா தற்போது தனது வழக்கறிஞர் மூலமாக தெரிவித்த தகவல்களின்படி “ 2019 ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் நடிகர் சுஷாந்த் வீட்டில் ரியா தங்கியிருந்தபோது, குடிபோதையில் இருந்த சுஷாந்தின் சகோதரி இருட்டில் ரியா படுக்கையில் இருக்கும்போது அவரை வந்து பிடித்தார். அதிர்ச்சியடைந்த ரியா அவரை உடனடியாக அறையைவிட்டு வெளியேறும்படி கூறினார். பிறகு ரியாவும் வீட்டைவிட்டு வெளியேறினார்” என்று தெரிவித்துள்ளார்


Advertisement

மேலும் “ இந்த நிகழ்வை சுஷாந்திடம் கூறியதும், அவர் தனது சகோதரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆரம்பம் முதலே சுஷாந்தின் குடும்பத்துக்கும் ரியாவுக்கும் நல்ல உறவு இல்லை என்றும், இந்த சம்பவத்துக்கு பிறகு சுஷாந்த் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement