தமிழக அரசின் அலட்சியத்தால்தான் நீட்தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது-கே.எஸ்.அழகிரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நீட் தேர்வு குறித்த உச்சநீதிமன்ற வழக்கில் தமிழகஅரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாகவே, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நடைமுறைக்கு வருகிற நீட் தேர்வை ரத்து செய்வதற்குரிய முயற்சிகளை மீண்டும் மேற்கொள்வதற்கு, பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த வேண்டும். நீட் தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவாக, நீட் தேர்வு தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தான் காரணமாகும். அதைத் தடுக்கத் தவறிய எடப்பாடி அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, மிக அதிகளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement