தொழில் கூட்டாளியை காருக்குள் பூட்டி தீவைத்த நண்பர், மூவர் படுகாயம்: ஆந்திராவில் அதிர்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பணத்தகராறு காரணமாக தொழில் கூட்டாளி, அவரது மனைவி மற்றுமொரு நபரை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு காருக்கு ஒருவர் தீவைத்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

நேற்று இச்சம்பவம் படமாடா காவல்நிலைய எல்லையில் நடந்ததாக கூறப்படுகிறது."வேணுகோபால் ரெட்டி முன்பு கங்காதருடன் தொழில் கூட்டாளியாக இருந்தார். இவர்கள் இருவரும் பயன்படுத்திய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்தனர். இருப்பினும் அவர்களின் வணிகம் இழப்புகளை ஏற்படுத்தியதால் இருவரும் பிரிந்தனர்" என்று விஜயவாடா போலீஸ் கமிஷனர் ( டி.சி.பி) வி ஹர்ஷவர்தன் ராஜு தெரிவித்தார்


Advertisement

மேலும் “வேணுகோபால் கங்காதருடன் பேச முயற்சிக்கிறார், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. நேற்று கங்காதர் அவரது மனைவி நாகவள்ளி மற்றும் ஒரு நண்பர் கிருஷ்ண ரெட்டி ஆகியோருடன் வேணுகோபாலை சந்தித்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாலை 4.45 மணியளவில் புகைபிடிப்பதாக போலிக்காரணத்தை சொல்லி வேணுகோபால் ரெட்டி காரில் இருந்து இறங்கி, விஸ்கி பாட்டிலில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை காரின் மீது ஊற்றி தீ வைத்தார். பிறகு வேணுகோபால் ரெட்டி சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார், ”என்று கூறுகிறார்

கார் எரியும் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் அந்த இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் மூவரும் காயமடைந்த நிலையில், ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்தனர். நிதித்தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடந்ததாக சொல்லும் காவல்துறை குற்றம் சாட்டப்பட்ட வேணுகோபால் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்

 


Advertisement

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement