போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் நீதி கிடைத்திட வேண்டும் - சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் அறப்போராட்டத்திற்கும், அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


Advertisement

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் அறப்போராட்டத்திற்கும், அரசப் பயங்கரவாதத்தில் உயிரிழந்த 13 பேரின் ஈகத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.

இதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற மக்கள் திரள் அறவழிப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கும் விரைவில் நீதி கிடைத்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement