வூஹானில் கேளிக்கை கொண்டாட்டம்: நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்!!!

Thousands-of-party-goers-packed-out-a-water-park-over-the-weekend-in-the-central-Chinese-city-of-Wuhan-where-the-corona-virus-first-emerged

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள வூஹான் நகரில் இருந்து தான் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமானது. 


Advertisement

image

தற்போது சீனாவில் வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். 


Advertisement

இந்நிலையில் வுஹானில் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் முகக்கவசம் பயன்படுத்துவது மாதிரியான கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்து  அங்கு அமைந்துள்ள வாட்டர் அம்யூஸ்மாண்ட் பார்க்கில் கூடி கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

image

அங்குள்ள பிரபல மாயா பீச் வாட்டர் தீம் பார்கில் மக்கள் அதிகளவில் கூடி நீர் சாகச விளையாட்டுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


Advertisement

76 நாள் ஊரடங்கிற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது தீம் பார்க். 

50 சதவிகித பார்வையாளர்களரின் வருகை இந்த தீம் பார்க்கில் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பெண்களுக்கு நுழைவு கட்டணத்தில் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

image

சீனாவில் தற்போது உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா துறையை மேம்படுத்த சில சலுகைகளையும் சீனாவின் மாகாண அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement