ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய வழக்கு: உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

துாத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.


Advertisement

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது; நிலத்தடி நீரில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என பொதுமக்கள்,  சூழலியாளர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. .


Advertisement

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

image

ஆலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநில இளைஞா் அணி அமைப்பாளர் தெர்மல் சொ.ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.


Advertisement

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.

வழக்கின் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக நீதிபதிகள் கடந்த ஜனவரி 8-ஆம் தேதியன்று ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement