ட்ரீட் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாக டான்ஸ் ஆடிய செல்ல நாய்க்குட்டி - க்யூட் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறந்த உணவைவிட ஒரு நாயை மகிழ்விக்க வேறு எதுவும் இருக்கமுடியாது. வெல்கம் டு நேச்சர் என்ற ட்விட்டர் கணக்கில் வெளியான ஒரு வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.


Advertisement

திங்களன்று ட்விட்டரில் வெளியான 27 விநாடிகள் மட்டுமே கொண்ட ஒரு வீடியோ க்ளிப்பில் சூப்பர் க்யூட் நாயின் அட்டகாசம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த நாயின் உரிமையாளர் க்ரோசண்டின் ஒரு துண்டை நாய்க்கு முன்னால் வைக்கிறார். அது மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டுகிறது. சில நிமிடங்கள் கழித்து அதன் வாயிலிருந்து எடுத்து தரையில் வைக்கிறார்.

அதைப் பார்த்த நாய் அந்த உணவைச் சுற்றி சுற்றி ஆடுகிறது. அந்த தருணத்தை நாய் கொண்டாடும் விதம் நெட்டிசன்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட 6 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 37,000 பார்வையாளர்களைப் பெற்று வைரலாகியுள்ளது. 3000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

பலரும் தங்கள் செல்லப் பிராணிகளுடனான அனுபவத்தையும், பல்வேறு கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement