திடீரென ரத்தினக்கல் நிறத்தில் காட்சியளித்த அமெரிக்காவின் பிரமிட் ஏரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள பிரமிட் ஏரியில் ஒரு நச்சு ஆல்கா படர்ந்ததைத் தொடர்ந்து அசாதாரணமான ரத்தினக்கல் போன்று நிறம் மாறியுள்ளது.


Advertisement

நீரில் அளவுக்கதிகமான கால்சியம் கார்பனேட் இருப்பதால் இதுபோன்ற நிறமாற்றம் ஏற்படுவதாக ஜாய்ன்ட் போலர் சேட்டிலைட் சிஸ்டம், கூட்டு தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மற்றும் நாசா ப்ரோக்ராம் கூறியுள்ளது. ஆனால் இது ஏரியின் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானது அல்ல என்றும் கூறியுள்ளது.

image


Advertisement

நியூயார்க் பதிவின்படி, பிரமிட் ஏரி ரெனோவிலிருந்து வடகிழக்கில் சுமார் 40 மைல் தொலைவில் உள்ளது. பையூட் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டின் தொலைதூர பாலைவன பகுதியில் அமைந்துள்ளது. மேலும் ட்ரூக்கி நதியிலிருந்து இதற்கு நீர் வருகிறது.

ஜூலை 22 முதல் அறிக்கை செய்யப்பட்ட நீர் மாதிரிகள் மனிதர்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் சயனோ டாக்சின் நச்சு அளவைக் காட்டின. எனவே அறிவிப்பு வரும்வரை அங்கு குடியிருப்பவர்கள் தண்ணீரை தொடாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

loading...

Advertisement

Advertisement

Advertisement