சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? - கமல்ஹாசன் ட்வீட்

Kamalahaasan-tweet-about-tasmac-open

மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? என கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்


Advertisement

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைககளை கடந்த மே 7ஆம் தேதி முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

image


Advertisement

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள்  நாளை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ட்வீட் செய்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,

''காய்கறி வாங்கச் சென்றவருக்கு கொரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கொரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கொரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கொரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்? ''என பதிவிட்டுள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement